அறிமுகம்

இந்த ஆவணத்தில் கீழ்கண்ட தலைப்புகள் விவாதிக்கபப்டுகின்றன:

  • நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

  • வசதி மேம்படுத்தல்கள்

  • கர்னல்-தொடர்பான மேம்படுத்தல்கள்

  • இயக்கி மேம்படுத்தல்கள்

  • தொழில்நுட்ப முன்பார்வைகள்

  • தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

  • தெரிந்த சிக்கல்கள்

Red Hat Enterprise Linux 4.7 பற்றிய தற்போதைய தகவல், இந்த வெளியீட்டு அறிக்கையில் காணப்படாது. மேம்படுத்தப்பட்ட Red Hat Enterprise Linux 4.7 இன் வெளியீட்டு அறிக்கையை பின்வரும் இணைய முகவரியில் பார்க்கவும்:

http://www.redhat.com/docs/manuals/enterprise/

நிறுவல்-தொடர்பான அறிக்கைகள்

பின்வரும் பிரிவில் Red Hat Enterprise Linuxஇன் நிறுவல் மற்றும் நிறுவல் நிரலான அனகோண்டா பற்றிய தகவல்கள் இருக்கும்.

குறிப்பு

ஒரு மைனர் Red Hat Enterprise Linux 4 (4.5 லிருந்து 4.6 போன்றவை)பதிப்பிலிருந்து Red Hat Enterprise Linux 4.7க்கு மேம்படுத்தும் போது, நீங்கள் Red Hat Networkஐ நிறுவப்பட்ட இணைய பயனர் முகப்பு அல்லது Red Hat Network Satellite வழியாக பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.

பிணையம் இல்லாமல் கணினியை மேம்படுத்தினால், செயல்பாட்டில் அனகோண்டா "மேம்படுத்தல்" என கொடுக்கவும். எனினும், இந்த அனகோண்டா வரையறுக்கப்பட்ட திறன்களை கூடுதல் தொகுபதிவக சார்பு அல்லது மூன்றாம் நபர் பயன்பாடுகளில் சிக்கல்களை கையாள கொண்டிருக்கும். மேலும், அனகோண்டா நிறுவல் பிழைகளை ஒரு பதிவு கோப்பில் அறிக்கையிடும்.

எனினும், Red Hat ஆப்லைன் கணினிகளை மேம்படுத்தும் போது, முதலில் உங்கள் கட்டமைப்பை மேம்படுத்த பரிந்துரை செய்கிறது. கவனமாக மேம்படுத்தும் முன் பதிவு பிழைகளை சரிபார்த்து பின் தொடரவும்

Red Hat Enterprise Linuxஇன் முக்கிய பதிப்புக்களுக்கிடையே மேம்படுத்தும் போது (எடுத்துக்காட்டாக, Red Hat Enterprise Linux 3 இலிருந்து Red Hat Enterprise Linux 4.7க்கு மேம்படுத்த) இது துணைபுரியாது. "மேம்படுத்தல்" விருப்பம் அனகோண்டாவில் இதனை செய்ய அனுமதிக்கிறது நிறுவலில் இது வேலை செய்யும் என்பதற்கு உத்திரவாதம் இல்லை. இவ்வாறு முக்கிய பதிப்புகளில் மேம்படுத்த கணினி பழைய அமைவுகள், சேவைகள் மற்றும் தனிபயன் கட்டமைப்புகளை பாதுகாப்பதில்லை, எனவே Red Hat முக்கிய மேம்படுத்தலின் போது தனியாக மேம்படுத்தல் செய்ய பரிந்துரை செய்கிறது

  • Red Hat Enterprise Linux 4.7 இல் உள்ளவைகளை குறுவட்டுகளில் நகலெடுக்க விரும்பினால் (பிணையம் வழியாக நிறுவ தயார்படுத்த) இயக்கத்தளத்திற்கான குறுவட்டுகளை மட்டும் நகலெடுக்கவும். கூடுதல் குறுவட்டுகளையோ அல்லது அடுக்கு மென்பொருள்களையோ நகலெடுத்தால் கோப்புகள் அனகோண்டா கோப்புகளின் மேல் எழுதப்பட்டு சிக்கலை நிறுவலை தடை செய்யும்.

    Red Hat Enterprise Linux ஐ நிறுவிய பின் இந்தக் குறுவட்டுக்களைப் பயன்படுத்தி நிறுவ வேண்டும்.

  • GRUBஇன் பதிப்பு Red Hat Enterprise Linux 4உடன் வருவது (மற்றும் அனைத்து மேம்படுத்தல்கள்) மென்பொருள் பிரதிபலிப்புக்கு (RAID1) துணைபுரிவதில்லை. எனினும், நீங்கள் Red Hat Enterprise Linux 4 ஐ ஒரு RAID1 பகிர்வில் நிறுவினால், பூட் லோடர் master boot record (MBR)க்கு பதிலாக முதல் நிலைவட்டில் நிறுவப்படும். இது கணினியை துவக்க விடாது.

    நீங்கள் Red Hat Enterprise Linux 4ஐ ஒரு RAID1 பகிர்வில் நிறுவ வேண்டுமென்றால், முதலில் MBRஇலிருந்து முன் இருக்கும் பூட்லோடரை அகற்ற வேண்டும்.

  • Red Hat Enterprise Linux 4 ஐ உரை முறைமையில் கணினியில் தட்டை பலக திரையகத்தில் நிறுவும் போது சில ATI அட்டைகள், திரை பகுதி மாற்றப்படும். இது ஏற்படும் போது, திரையின் சில பகுதிகள் பாதுகாப்பில்லாமல் இருக்கும்.

    இது ஏற்பட்டால், linux nofb மதிப்புருவுடன் நிறுவலை செய்யவும்

  • இந்த வெளியீட்டில் Red Hat Enterprise Linux 4.6இலிருந்து மேம்படுத்தும் போது, minilogd பல்வேறு SELinux மறுப்புகளை பதிவு செய்யலாம். இது பாதிப்பை விளைவிக்காது, மற்றும் இதனை பாதுகாப்பாக தவிர்க்கலாம்

வசதி மேம்படுத்தல்கள்

SHA-256/SHA-512ஐ பயன்படுத்தி கடவுச்சொல் ஹெஷிங்

SHA-256 மற்றும் SHA-512 ஹெஷ் செயல்பாடுகளை கொண்டு இப்போது கடவுச்சொல் ஹெஷிங்கிற்குத் துணைபுரிகிறது.

SHA-256 அல்லது SHA-512 கணினியில் நிறுவப்பட்டால், authconfig --passalgo=sha256 --kickstart அல்லது authconfig --passalgo=sha512 --kickstartஐ இயக்கவும். இருக்கும் பயனர் கணக்குகள் அவர்களின் கடவுச்சொல் மாற்றப்படாத வரை பாதிக்கப்படாது.

புதிதாக நிறுவப்பட்ட கணினிகளில், SHA-256 அல்லது SHA-512 ஐ பயன்படுத்தி கிக்ஸ்டார்ட் நிறுவல்களுக்கு மட்டுமே கட்டமைக்க முடியும். இதனை செய்ய --passalgo=sha256 அல்லது --passalgo=sha512 விருப்பங்களை கிக்ஸ்டார்ட் auth கட்டளையில் பயன்படுத்தவும்; மேலும் --enablemd5 விருப்பம் இருந்தால் அதனை நீக்கவும்.

உங்கள் நிறுவல் கிக்ஸ்டார்ட்டை பயன்படுத்தவில்லை எனில், மேலே குறிப்பிட்டது போல authconfigஐ பயன்படுத்தி, பின் நிறுவலுக்குப் பின் அனைத்து கடவுச்சொல்லையும் (ரூட்டையும் சேர்த்து) மாற்றவும்

libuser, pam, மற்றும் shadow-utilsக்கு இந்த கடவுச்சொல் கணிமுறைக்கு தொடர்புடைய விருப்பங்கள் சேர்க்கப்படும். authconfig தேவையான விருப்பங்களை தானாக கட்டமைக்கிறது, எனவே அதை கைமுறையாக மாற்ற தேவையில்லை:

  • crypt_style விருப்பத்தின் புதிய மதிப்புகள் மற்றும் hash_rounds_min மற்றும் hash_rounds_max இன் புதிய விருப்பங்கள் இப்போது /etc/libuser.conf பிரிவில் [defaults]க்கு துணைபுரிகிறது. மேலும் விவரங்களுக்கு /usr/share/doc/libuser-[libuser version]/README.shaஐ பார்க்கவும்.

  • புதிய விருப்பங்கள் sha256, sha512 மற்றும் rounds இப்போது pam_unix PAM தொகுதியால் துணைபுரிகிறது. மேலும் தகவலுக்கு, /usr/share/doc/pam-[pam version]/txts/README.pam_unixஐ பார்க்கவும்.

  • /etc/login.defs இலிலுள்ள பின்வரும் புதிய விருப்பங்கள் இப்போது shadow-utilsஆல் துணைபுரிகிறது:

    • ENCRYPT_METHOD — பயன்படுத்த வேண்டிய மறைகுறியாக்க முறையை குறிக்கிறது. சரியான மதிப்புகள் DES, MD5, SHA256, SHA512. இந்த விருப்பம் குறிக்கப்பட்டால், MD5_CRYPT_ENAB தவிர்க்கப்படும்.

    • SHA_CRYPT_MIN_ROUNDS மற்றும் SHA_CRYPT_MAX_ROUNDSENCRYPT_METHOD SHA256 அல்லது SHA512க்கு அமைக்கப்பட்டால் ஹெஷிங் எண்ணிக்கையை குறிக்க பயன்படும். எந்த மதிப்பும் அமைக்கப்படாவிட்டால், ஒரு முன்னிருப்பு மதிப்பு glibc ஆல் அமைக்கப்படும். ஒரே ஒரு மதிப்பு அமைக்கப்பட்டால் மறைக்குறியாக்க முறை வட்டங்களின் எண்ணிக்கையை குறிக்கும்.

      இரண்டு விருப்பங்களும் பயன்படுத்தப்பட்டால், குறிப்பில்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களின் எண்ணிக்கை ஒரு இடைவேளையை குறிப்பிடும். தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டங்களின் எண்ணிக்கை இடைவேளையின் வரையறை செய்யப்பட்டுள்ளது [1000, 999999999].

comps.xml இல் OFED

குழு OpenFabrics Enterprise Distribution இப்போது comps.xmlஇல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த குழு உயர் செயல்திறனுள்ள பிணையம் மற்றும் க்ளஸ்டருக்கான தொகுதிகளை கொண்டுள்ளது (எடுத்துக்காட்டாக, InfiniBand மற்றும் Remote Direct Memory Access).

மெய்நிகராக்கம்

இந்த மேம்படுத்தல் பகுதி மெய்நிகராக்கப்பட்ட தடுப்பு சாதனம் மற்றும் பிணைய இயக்கிகளை பயன்படுத்த செயல்படுத்தப்படுகிறது, இது முழுவதும் மெய்நிகராக்கப்பட்ட விருந்தினர்களின் செயல்திறனை அதிகரிக்கும். கூடுதலாக, நீங்கள் இப்போது மூன்று மெய்நிகர் பிணைய முகப்பை (VNIF) விருந்தினர் டொமைனில் பயன்படுத்தலாம்

இயக்கி

divider=[value] விருப்பம் ஒரு கர்னல் கட்டளைவரி அளவுரு ஆகும் இது கணினி கடிகாரத்தை அதே தெரியும் HZ நேர மதிப்புக்கு பயனர் இடத்திற்கு சரி செய்கிறது

divider=[value] விருப்பத்தை பயன்படுத்துவது உங்கள் CPU அதிகரித்தலை குறைத்து பணத்தின் மதிப்பை அதிகரிக்கிறது. இது மெய்நிகராக்கப்பட்ட சூழலில் சில பயன்பாடுகளில் பயனுள்ளதாக இருக்கிறது

தரப்படுத்தப்பட்ட 1000Hz கடிகாரத்திற்கு [values] பயனுள்ளதாகும்:

  • 2 = 500Hz

  • 4 = 250Hz

  • 10 = 100Hz (முந்தைய வெளியீட்டில் பயன்படுத்தப்பட்ட மதிப்பு Red Hat Enterprise Linux)

மெய்நிகராக்கப்பட்ட கர்னல் 250HZ கடிகாரத்தை முன்னிருப்பாக பயன்படுத்துகின்றது. எனினும் இதற்கு divider=[value] விருப்பம் dom0இல் அல்லது பகுதி மெய்நிகராக்கப்பட்டதில் தேவையில்லை

ஃபயர்பாக்ஸ் ரீபேஸ்

ஃபயர்பாக்ஸ் இப்போது பதிப்பு 3.0க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் வசதிகள் பல்வேறு திருத்தங்கள் மற்றும் விரிவாக்கங்களை கொண்டுள்ளது:

  • ஃபயர்பாக்ஸ் உலாவி சாளரம் திறந்தவுடன் முதன்மை பக்கங்கள் சரியாக ஏற்றுவதை அமைக்கிறது.

  • ஃபயர்பாக்ஸ் சரம் "do"ஐ தேடும் போது அழிக்கப்படாது.

  • ஃபயர்பாக்ஸ் 64-பிட் முறைமை இப்போது ext JavaScript நூலகத்தை இப்போது சரியாக ஏற்றுகிறது. ஃபயர்பாக்ஸின் முந்தைய பதிப்புகளில், இணைய அடிப்படையான பயன்பாடுகளில் பயன்படுத்தப்பட்ட நூலகங்கள் இதனை ஏற்ற நீண்ட நேரம் எடுக்கும் அல்லது ஏற்றாது.

  • ஃபயர்பாக்ஸ் கையாளுவது போல jar:URI திட்டத்தை ஒரு கிராஸ்சைட் ஸ்கிரிப்ட் கையாளுகிறது. இது தவறான இணைய தளங்களிலிருந்து பயனருக்கு எதிராக தாக்குதலை கொடுக்கலாம். இந்த மேம்படுத்தலில் இந்த சிக்கல் தீர்க்கப்பட்டது.

  • ஃபயர்பாக்ஸ் செயல்படும் விதத்தில் பல்வேறு குறைபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இணைய தளங்கள் சில தவறான உள்ளடக்கங்களை கொண்டிருப்பது ஃபயர்பாக்ஸ் ஐ செயலிழக்க செய்கிறது அல்லது ஃபயர்பாக்ஸ்ஐ இயக்கும் பயனரின் குறியீடுகளை செயல்படுத்தினாலும் செயலிழக்கச் செய்கிறது. இந்தப் பாதுகாப்பு சிக்கல் இந்த மேம்படுத்தலில் சரி செய்யப்பட்டது.

  • ஒரு ரேஸ் நிலை ஃபயர்பாக்ஸ் வழியில் window.location தன்மை ஒரு இணைய பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குறைபாட்டால், அது ஒரு இணைய பக்கத்தை Referer தலைப்பில் தவறானது என அமைக்கிறது. இது cross-site request forgery (CSRF) தாக்குதலை இணையதளங்களுக்கு எதிராகவும் Referer தலைப்பில் செய்கிறது. இந்தப் பாதுகாப்பு சிக்கல் இந்த மேம்படுத்தலில் சரி செய்யப்பட்டது.

  • ஃபயர்பாக்ஸ் இப்போது மடிக்கணினி வெளியார்ந்த காட்சியில் சரியாக ரெண்டர் செய்கிறது.

எனினும், இந்த ஃபயர்பாக்ஸ் மேம்படுத்தலானது அனைத்து JavaScripts அல்லது ஃபயர்பாக்ஸ் கூடுதல் இணைப்புகளுக்கு முழுவதும் ஏற்றதாக இல்லை.

மேலும், Red Hat பல்வேறு வணிக இணைய பயன்பாடுகள் சில கிராஸ் சைட் ஸ்கிரிப்ட் குறைபாட்டில் இந்த ஃபயர்பாக்ஸ் மேம்படுத்திலில் அறிக்கையிடப்பட்டது. இந்த ஸ்கிரிப்டிங் குறைபாடு பின்வரும் இணைப்பில் குறிப்பிட்டப்பட்டுள்ளது:

தொடர்ந்து, இந்த வணிக இணைய பயன்பாடுகள் சில செயல்பாட்டில் இழப்பை கொண்டிருக்கலாம். நீங்கள் இதனை கூடுதல் JavaScript பிழைகள் மூலம் ஃபயர்பாக்ஸ் பிழை பணியகத்தில் அறியலாம். (கருவிகள் = > பிழை பணியகம்). Red Hat தற்போது இது தொடர்பான விற்பனையாளர்களிடம் அறிக்கையிட்டு வருகிறது.

கர்னல்-தொடர்பான மேம்படுத்தல்கள்

பொதுவான கர்னல் மேம்படுத்துதல்
  • iostat இப்போது வெளிப்பாடுகள் புள்ளிவிவரங்களை நிலை மற்றும் பகிர்வின் I/O செயல்திறனுக்கு வெளியிடுகிறது.

  • I/O கணக்கிடுதல் இந்த வெளியீட்டில் இப்போது பல கோர் புள்ளிவிவரங்களை கொடுக்கிறது. இது ru_inblock மற்றும் ru_outblockஐ பயன்படுத்த மூலம் செயல்படுத்தப்படுகிறது, இது ஏற்கனவே அப்ஸ்ட்ரீமில் பயன்படுத்தப்பட்டது

  • show_mem() வெளிப்பாடு இப்போது pagecache பக்கங்களின் எண்ணிக்கை கொண்டுள்ளது. இது /var/log/messagesக்கு பணியகத்திற்கு பிழைத்திருத்த தகவல்களை அனுப்ப பயனுள்ளதாக இருக்கும், குறிப்பாக நினைவகம் நிறையும் போது.

  • O_ATOMICLOOKUP கொடி இப்போது நீக்கப்பட்டது. இந்த கொடி நடப்பு பயனர் இட டீமானால் பயன்படுத்தவில்லை. மேலும் பிட் O_ATOMICLOOKUP இல் பயன்படுத்தியது வேறு கொடியால்(O_CLOEXEC); பயன்படுத்தப்படுகிறது எனினும், O_ATOMICLOOKUP இந்த பிட் பகிர்வில் முரண் வராமல் இருக்க நீக்கப்பட்டது.

  • கர்னல் இப்போது செயல்முறை வரம்பு தகவலை /proc/[PID]/limits இறக்குகிறது (இங்கு [PID] என்பது செயல்முறை ID).

  • அளவுரு TCP_RTO_MIN 3000 மில்லி விநாடிகளுக்கு கட்டமைக்கப்படுகிறது. TCP_RTO_MIN என்பது முந்தைய பதிப்பில் மாற்றக்கூடியதாக இல்லை.

    இந்த மேம்படுத்தல் அதிக TCP/IP நிகழ்வை அனுமதிக்கிறது, மற்றும் பயன்பாட்டை ஒரு பரிமாற்றத்திற்கு மறுதுவக்க செயல்படுத்துகிறது (எடுத்துக்காட்டாக, மெபைல் ஃபோன் பரிமாற்ற விகிதம்)

    நீங்கள் TCP_RTO_MIN அளவுருவை ip route வழியாக கட்டமைக்கலாம். எடுத்துக்காட்டாக, TCP_RTO_MIN ஐ அதிகபட்சமாக 3000 மில்லிவிநாடிகளாக அமைக்க, இதனை பயன்படுத்தவும்:

    ip route change [route] dev eth0 rto_min 3s

    ip route பற்றிய மேலும் தகவலுக்கு,man ipஐ பார்க்கவும்.

  • udp_poll() செயல்பாடு இப்போது செயல்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் கணினி அழைப்பு select() இல் தவறான மதிப்பைக் குறைக்கிறது.

  • இப்போது நீங்கள் 32-பிட் inode எண்களை செயல்படுத்தலாம்/நீக்கலாம். இதனை செய்ய, கர்னல் அளவுருவான nfs.enable_ino64=ஐ பயன்படுத்தவும். nfs.enable_ino64=0 அமைத்தல் NFS கிளையனை 32-பிட் inode எண்களை readdir() மற்றும் stat() கணினி அழைப்புக்கு தெரிவிக்கும் (முழு 64-பிட் inode எண்களுக்குப் பதிலாக).

    முன்னிருப்பாக, இந்த கர்னல் அளவுரு உண்மையான 64-பின் ஐனோட் எண்களை கொடுக்க அமைக்கப்படுகிறது.

  • நீங்கள் இப்போது NFS ஐ குறைந்த நினைவகத்தில் எழுதுவதை தவிர்க்கலாம். இதனை செய்ய, /proc/sys/vm/nfs-writeback-lowmem-only1 என அமைக்கவும் (இது 0 என முன்னிருப்பாக இருக்கும்).

    முந்தைய வெளியீடு இந்த செயல்திறனை சேர்க்கவில்லை. இது NFS வாசித்தல் செயல்திறனை சில சமயங்கள் குறைக்கிறது, குறிப்பாக கணினி அதிகமான அளவு NFS வாசித்தல்/எழுதுதல் கோரிக்கைகளை எதிர்கொள்ளும் போது.

  • இப்போது நீங்கள் dirty_ratio மற்றும் dirty_background_ratio கணக்கீடுகளில் ஒப்பிடப்பட்ட கோப்பு பக்கங்களை அமைக்க வேண்டுமா. இதனை செய்ய, /proc/sys/vm/write-mapped1 என அமைக்கவும் (இது முன்னிருப்பாக 0 என அமைக்கப்பட்டிருக்கும்).

    /proc/sys/vm/write-mapped1 ஆக அமைத்தல் உங்கள் விரைவாக NFS ஐ செயல்திறனை வாசிக்க அனுமதிக்கிறது. எனினும், நினைவகம் நிறைவதை தவிர்க்கிறது.

  • CIFS இப்போது பதிப்பு 1.50cக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தல் பல்வேறு விரிவாக்கங்கள் மற்றும் பிழைத்திருத்தங்களை கொண்டிருக்கும், OS/2 பகிர்தலை ஏற்ற செயல்திறன் பெற்றிருக்கும்.

  • Core dump masking இப்போது துணை புரிகிறது. இது ஒரு கோர் டம்ப்பை பகிரப்பட்ட நினைவக பகுதியில் தவிர்த்து ஒரு கோர் டம்ப் கோப்பினை உருவாக்குகிறது. இந்த வசதி உங்கள் பெயரில்லாத பகிரப்பட்ட நினைவகத்தை ஒவ்வொரு செயலுக்கும் தேர்ந்தெடுக்க வேண்டுமா என அனுமதிக்கிறது

    ஒரு செயல் டம்ப் ஆகும் போது, அனைத்து பெயரில்லாத நினைவகமும் ஒரு கோர் கோப்பில் வரம்பில்லாமல் நீளமாக எழுதப்படும். சில சமயங்களில், நீங்கள் சில நினைவக பகுதிகளில் (பெரிய பகிரப்பட்ட நினைவகங்களில்) டம்பிலிருந்து தவிர்ப்பதற்கு. மாறாக, நீங்கள் கோப்பு பின்னப்பட்ட நினைவக பகுதியில் ஒரு கோர் கோப்பில் தனியாக கோப்பில் சேமிக்கப்படும்.

    இந்த நோக்கத்திற்கு, நீங்கள் /proc/[pid]/coredump_filter ஐ நினைவக பிரிவுக்கு [pid] செயலை டம்ப் செய்ய குறிப்பிட பயன்படுத்தலாம். coredump_filter என்பது ஒரு பிட் மாஸ் நினைவக வகைகளாகும். ஒரு பிட் மாஸ்க் அமைக்கப்பட்டால், நினைவக பிரிவு தொடர்புடைய நினைவக வகை ட்ம்ப் செய்யப்படும்.

    பினவரும் நினைவக வகைகள் துணைபுரிகின்றன:

    • பிட் 0 — தனிப்பட்ட பெயரில்லாத நினைவகம்

    • பிட் 1 — பகிரப்பட்ட பெயரில்லாத நினைவகம்

    • பிட் 2 — கோப்பு திருப்பபட்ட தனிப்பட்ட நினைவகம்

    • பிட் 3 — கோப்பு திருப்பபட்ட தனிப்பட்ட நினைவகம்

    [pid]க்கு ஒரு பிட்மாஸ்க்கை அமைக்க, தொடர்புடைய பிட்மாஸ்க்கை /proc/[pid]/coredump_filterக்கு அமைக்கவும். எடுத்துக்காட்டாக, ஒரு டம்பை இணைக்கப்பட்ட 1111 செயல்முறைகளை அனைத்து பகிரப்பட்ட நினைவக பிரிவுகளிலிருந்து பிரிக்க, இதனை பயன்படுத்தவும்:

    echo 0x1 > /proc/1111/coredump_filter

    coredump_filter இன் முன்னிருப்பு மதிப்பு 0x3, இது அனைத்து பெயரில்லாத நினைவக பகுதியை டம்ப் என குறிக்கிறது. மேலும் பிட் மாஸ்க் நிலையில், MMIO பக்கங்கள் (ஃப்ரேம் ஃப்பர் போன்றவை) டம்ப் செய்யப்படாது மற்றும் vDSO எப்போதும் டம்ப் செய்யப்படும்

    ஒரு புதிய செயல்முறை உருவாக்கப்படும் போது, பின்மாஸ்க் நிலை அதன் பெற்றோரிலிருந்து பெறப்படும், எனினும் Red Hat நிரலை இயக்கும் முன் coredump_filterஐ அமைக்க பரிந்துரைக்கிறது. இதனை செய்ய, echoஐ தேவையான பிட்மாஸ்க்கை நிரலை இயக்கும் முன் /proc/self/coredump_filter செய்யவும்.

இந்த தளத்திற்கு குறிப்பிடும் கர்னல் மேம்படுத்தல்கள்
  • /dev/msr[0-n] சாதனக் கோப்புகள் சேர்க்கப்பட்டது.

  • powernow-k8 இயக்கி ஒரு தொகுதியாக கம்பைல் செய்யப்படுகிறது. இது கர்னலில் கம்பைல் செய்யப்படாமல் இயக்கி மேம்படுத்தல்களை செயல்படுத்த எளிதாக்குகிறது.

  • Oprofile இப்போது புதிய Greyhound வன்பொருளில் நிகழ்வு சார்ந்த விவரக்குறிப்புக்கு துணைபுரிகிறது.

  • AMD ATI SB800 SATA இப்போது கட்டுப்படுத்தி துணைப்புரிகிறது.

  • AMD ATI SB600 மற்றும் SB700 SATA கட்டுப்படுத்தி இப்போது 40-pin IDE வடத்திற்கு துணைபுரிகிறது.

  • 64-பிட் நேரடி நினைவக செயல்முறை (DMA) இப்போது AMD ATI SB700க்கு துணைபுரிகிறது.

  • PCI சாதன IDகள் Intel ICH10ஐ சேர்ப்பதற்கு துணைபுரிய தேவைப்படுகிறது.

இயக்கி மேம்படுத்தல்கள்

பொதுவான இயக்கி/தளம் மேம்படுத்தல்
  • i2c-piix4 கெர்னல் தொகுதி இப்போது AMD SBX00 SMBusதுணைபுரிய செயல்படுத்துகிறது.

  • i5000_edac: இயக்கி இன்டெல் 5000 சிப்செட்கள் துணைபுரிய சேர்க்கப்படுகிறது.

  • i5000_edac இயக்கி இப்போது SB600 IDE சாதனங்களில் துணைபுரிகிறது.

  • Intel Tolapai சிப்செட்டின் இன் சரியான விரைவக தகவல் இப்போது சேர்க்கப்பட்டுள்ளது. இந்த வன்பொருள் சரியாக பட்டியலிடப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும்

  • i2c_piix4: தொகுதி AMD ATI SB600, SB700, மற்றும் SB800க்கு துணைபுரிய சேர்க்கப்பட்டது.

  • OpenFabrics Enterprise Distribution (OFED) இந்த வெளியீட்டில் செயல்படுத்தியது இப்போது OFED பதிப்பு 1.3 சார்ந்து உள்ளது. இந்த விரிவாக்கம் துணை InfiniBand இயக்கிகளை பயன்படுத்தும் வன்பொருளுக்காகும்.

  • wacom: பின்வரும் உள்ளீடு சாதனங்களுக்கு துணைபுரிய இயக்கி மேம்படுத்தப்பட்டது

    • Intuos3 12x19

    • Intuos3 12x12

    • Intuos3 4x6

    • Cintiq 20wsx

  • i2c-i801: இயக்கி (தொடர்புடைய PCI IDகளுடன்) Intel Tolapaiக்கு துணைபுரிய மேம்படுத்தப்பட்டது.

  • sata_svw இயக்கி இப்போது Broadcom HT1100 சிப்செட்டில் துணைபுரிகிறது.

  • libata: இயக்கி Native Command Queuing (NCQ) ஐ செயல்படுத்த Hitachi இயக்கியை நீக்கி மேம்படுத்தப்பட்டது.

  • ide: இயக்கி ide=disableஐ சேர்க்க, ஒரு கர்னல் PCI தொகுதி அளவுருவை சேர்க்க ide இயக்கிகளை செயல்நீக்க பயன்படுத்தலாம்.

  • psmouse: இயக்கி சரியாக துணைபுரியும் உள்ளீடு சாதங்களை cortps நெறிமுறையில் மேம்படுத்தப்படுகிறது. 4-பொத்தான் மவுஸ் எடுத்துக்காட்டு உள்ளீடு சாதனமாக Cortronஆல் உருவாக்கப்பட்டதாகும்.

  • eHEA: அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு பொருந்த இயக்கி மேம்படுத்தப்படுகிறது. இந்த மேம்படுத்தல் பல்வேறு அப்ஸ்ட்ரீம் பிழைத்திருத்தங்கள் மற்றும் விரிவாக்கங்களை செயல்படுத்தி IBM i6 மற்றும் p6க்கு துணைபுரிகிறது:

    • கூடுதலாக Large Receive Offload (LRO)ஐ பிணைய தொகுதியாக துணைபுரிகிறது.

    • poll_controllerஇன் கூடுதலாக, netdump மற்றும் netconsole தொகுதிகளுக்கு துணைபுரிவது தேவையானதாகும்.

  • zfcp: அப்ஸ்ட்ரீம் பிழைத்திருத்தங்களுக்கு இயக்கி மேம்படுத்தல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேம்படுத்தல் பல்வேறு பிழைத்திருத்தங்களை செயல்படுத்துகிறது:

    • அடாப்டார்கள் மீண்டும் ஒரு பல பாதையில் சூழலில் திறக்கப்படும் போது ஒரு ஃபைபர் தட நீக்கம் நடைபெற்றபின், பாதிக்கப்பட்ட பாதைகள் செயலிழக்கப்பட்டது என குறிப்பப்படும். இந்த மேம்படுத்தலில், தொடர்புடைய அடாப்டர் கொடிகள் இப்போது சரியாக நிகழ்வின் போது அகற்றப்படும்

    • ஒரு fsf கோரிக்கை நேரம் முடிந்தால், அடாப்டர் மீண்டும் மீட்கப்பட்ட பின் தோல்வி என குறிக்கப்படவில்லை. ZFCP_STATUS_COMMON_ERP_FAILED அடாப்டர் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட பின் இப்போது அகற்றப்பட்டது.

    • BOXED கொடி இப்போது அடாப்டர் வெற்றிகரமாக மறு செயல்படுத்தப்பட்ட பின் அகற்றப்பட்டது.

    • ஒரு பிழை SCSI ஸ்டேக் மற்றும் ERP த்ரட்டிற்கு இடையே டெட்லாக் (சில சமயம், சில சாதனங்களை பதிவு செய்யும் போது) இப்போது சரி செய்யப்பட்டது

    • chccwdevஐ ஒரு சாதறத்தை "ஆப்லைன்" என ஒரு பல பாதை சூழலில் பயன்படுத்தும் போது, I/O அனைத்து பாதைகளில் வைக்கப்படுகிறது. கூடுதலாக, chccwdev கட்டளையை பயன்படுத்தும் கோது அதே சாதனத்தை ஆன்லைனில் வைக்கும் போது சரியான பாதை சரிபார்த்தலை இன்னும் பயன்படுத்தும்.

பிணையம்
  • bnx2x:Broadcom 5710 சிப்செட்டில் பிணைய அடாப்டருக்கு துணைபுரிய இயக்கி சேர்க்கப்பட்டுள்ளது.

  • cxgb3: இயக்கி Chelsio 10G ஈத்தர்நெட் கட்டுப்படுத்தி மற்றும் OFED சேவையளிக்க மேம்படுத்தப்படுகிறது.

  • realtek: இயக்கி Realtek RTL8111 மற்றும் RTL8168 PCI-E பிணைய முகப்பு அட்டைக்கு துணைபுரிய மேம்படுத்தப்பட்டது.

  • e1000: மாற்று MAC முகவரிகளுக்கு துணைபுரிகிறது, மெய்நிகர் இணைப்பு வடிவமைப்பிற்குத் துணைபுரிய தேவைப்படுகிறது.

  • e1000e: இயக்கி சமீபத்திய அப்ஸ்ட்ரீம் பதிப்புக்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் ICH9m மற்றும் 82574L Shelter Island பிணைய முகப்பு அட்டைகள் மற்றும் பல்வேறு அப்ஸ்ட்ரீம் திருத்தங்களுக்கும் துணைபுரிகிறது

  • bnx2: இயக்கி அப்ஸ்ட்ரீம் பதிப்பு 1.0.8-k2க்கு மேம்படுத்துகிறது. இந்த இயக்கி பதிப்பு Broadcom 5709s சிப்செட்டுக்கு இப்போது துணைபுரிகிறது.

  • igb: இயக்கி அப்ஸ்ட்ரீம் பதிப்பு 1.0.8-k2க்கு மேம்படுத்துகிறது. இந்த இயக்கி பதிப்பு Intel 82575EB (Zoar) சிப்செட்டுக்கு இப்போது துணைபுரிகிறது.

  • s2io: பதிப்பு 2.0.25.1க்கு மேம்படுத்தப்பட்டு Neterion Xframe-II 10GbE பிணைய அடாப்டருக்கு சேவையளிக்கிறது.

  • tg3: இயக்கி அப்ஸ்ட்ரீம் பதிப்பு 3.86க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல்வேறு திருத்தங்கள் மற்றும் விரிவாக்கங்களை கொண்டுள்ளது:

    • ஒரு irq_sync ரேஸ் நிலை சிக்கல் இப்போது திருத்தப்பட்டது.

    • Auto-MDI இப்போது செயல்படுத்தப்பட்டது.

  • forcedeth: அப்ஸ்ட்ரீம் பதிப்பு 0.61க்கு இயக்கியை மேம்படுத்தியது. இந்த மேம்படுத்தல் பின்வரும் சிப்செட்களுக்குத் துணைபுரிகிறது:

    • MCP73

    • MCP77

    • MCP79

    இந்த மேம்படுத்தல் பல்வேறு பிழைத்திருத்தங்களை WOL, MAC முகவரி வரிசைப்படுத்தல் மற்றும் tx நேரமுடிந்தல் சிக்கல்களுக்கு கொடுக்கிறது.

சேமிப்பகம்
  • stex: பதிப்பு 3.6.0101.2க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல்வேறு விரிவாக்கங்கள் மற்றும் பிழைத்திருத்தங்களுக்கு செயல்படுத்துகிறது.

  • mpt fusion இயக்கிகள் பதிப்பு 3.12.19.00க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் பல்வேறு விரிவாக்கங்கள் மற்றும் திருத்தங்களை கொண்டுள்ளது:

    • வரிசை ஆழத்தினை மாற்ற அளவுருவை மாற்றுவது இப்போது mptsas.c, mptspi.c மற்றும் mptfc.cஇல் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அளவுருகள் mptsas_device_queue_depth, mptspi_device_queue_depth மற்றும் mptfc_device_queue_depth. மாறும் அளவுருக்களின் முன்னிருப்பு மதிப்பு 48.

    • 36GBக்கு அதிகமான அளவு நினைவகம், 1,078 scatter/gather உள்ளீடுகள் இப்போது துணைபுரிகிறது.

    • கொடி ioc->broadcast_aen_busy சேர்க்கப்பட்டது. இந்த கொடி mptsas_broadcast_primative_work த்ரட் இயக்கும் போது அமைக்கப்படுகிறது. கூடுதல் aen நிகழ்வுகள் வெளியிடப்படும் போது, ioc->broadcast_aen_busy கொடி அமைக்கப்படும் போது அவை நிராகரிக்கப்படும்.

      கூடுதலாக, SCSI_IO கட்டளை ioc->broadcast_aen_busy கொடி அமைக்கப்பட்ட பின் மறு வரிசைப்படுத்தப்படும். இந்த கொடி mptsas_broadcast_primative_work த்ரட் முடிந்தவுடன் அகற்றப்படும்.

    • உள்ளார்ந்த கட்டளை நேரமுடிதல் இப்போது ஒரு Diagnostic Resetஐ கொடுத்து செயலிழப்பு நிலையை அகற்றுகிறது ஒரு கட்டளை sync cacheகொடுக்கப்படும் போது இயக்கி ஏற்றப்படாமல் இருக்கும். இந்த செயல்திறன் இரண்டு நேரமுடிதல் செயலில் செய்யப்படுகிறது: ஒரு நேரம் முடிதல் அனைத்து உள்ளார்ந்த கட்டளைகளையும் கையாளுகிறது மற்றொன்று டொமைன் சரிபார்த்தலுக்கு தொடர்பானவற்றை கையாளுகிறது

    • டொமைன் சரிபார்த்தல் நேரமுடிதல் இப்போது ஒரு பஸ் மறுஅமைவை ஒரு இலக்கு மறுஅமைவிற்கு கொடுக்கிறது.

    • ஒரு Task Management விண்ணப்பம் (ஒரு IOCTL முகப்பு வழியாக) முடித்த தொடர்புடைய IOCTL நேரம் காட்டி இப்போது அழிக்கப்பட்டது. இது நேரம்காட்டியை காலாவதியாவதிலிருந்து தடுக்கிறது; நேரம்காட்டி முடிவடைதல் ஒரு புரவலன் மறுஅமைவை Task Management விண்ணப்பம் வெற்றிகரமாக முடித்தாலும் செய்கிறது.

  • qla2xxx: பதிப்பு 8.02.00-k5க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் qla2xxx பின்வரும் துணைபுரிதலை சேர்க்கிறது:

    • EHAFT, ஒரு QLogic ஹொஸ்ட் பஸ் அடாப்டர் நுட்பம் ஃபைபர் சேனல் சாதனங்களின் செயல் தகவலை கொடுக்கிறது.

    • 8GB fibre-சேனல் சாதனங்கள்

    இந்த மேம்படுத்தல் பல்வேறு வளர்ச்சிகளை கொடுக்கிறது, ஒரு பிழைத்திருத்தம் ஒரு லூப்பில் காத்திருப்பதிலிருந்து தடுத்தலை ஒரு LOOP_DEAD நிலையில் ஏற்கனவே தடுக்கிறது.

  • qla3xxx: இயக்கி பதிப்பு v2.03.00-k4-rhel4.7-01க்கு மேம்படுத்தப்பட்டது. இந்த மேம்படுத்தல் திருத்தங்கள் qla3xxx இயக்கி கொண்ட ஒரு முகப்பு ஒரு VLANஇல் பயன்படுத்தப்பட்டது சரி செய்யப்பட்டது, உள்பிணை முடித்ததல் கையாள முடியவில்லை மற்றும் TCP/IP ஸ்டேக்கிற்கு கொடுக்கப்பட்டது.

  • qla4xxx: பதிப்பு 5.01.03-d0க்கு மேம்படுத்தியது. இது பின்வரும் மாற்றங்களை செயல்படுத்துகிறது:

    • ஒரே இலக்கில் இருக்கும் ஒவ்வொரு துறைக்கும் ஒரு அமர்வு இப்போது உருவாக்கப்பட்டது. கூடுதலாக, ஒரு பிழை ஒரு மறு புகுபதிவு கோரிக்கையில் qla4xxx ஐ தடுப்பது சில இலக்குகளுக்கு (ஒரு தோல்விக்கு அல்லது வடம் இழுத்தலுக்கு பின்) இப்போது சரி செய்யப்பட்டது.

    • qla4xxxஇன் முந்தைய பதிப்புகளில், I/O வரிசை ஆழம் "வரிசை முழு" பிழைகளால் பாதிக்காது. இப்போது வரிசை ஆழங்கள் இதற்கான "வரிசை முழு" பிழை ஏற்படும், இது I/O பிழை கையாளுதலை அதிகரிக்கிறது. தொடர்ந்து, அனைத்து LUNகளை வரிசை ஆழத்தில் ஒவ்வொரு இலக்கிற்கும் வரையறுக்கிறது.

    • SCSI செயல்பாடு இப்போது ஃபெர்ம்வேர் துவக்குதலை செயல்படுத்துகிறது. இந்தப் பிழை திருத்தம் SCSI செயல்பாடு ஒரு அறிவிப்பை மென் மறுஅமைவுகள் அல்லது முக்கியமாக பிழைகளை ஏற்படுவதற்கு முன் ஃபெர்ம்வேர் துவக்குதலை முடிக்கிறது

    • சில இலக்குகளை ஸ்கேன் செய்யும் போது ஒரு பிழை இயக்கத்தளத்தை தடுப்பது "செயலற்றதிலிருந்து" "செயலுக்கு" (இயக்கி துவக்கும் போது) வந்து இப்போது சரி செய்யப்படுகிறது

  • CCISS:இயக்கி பதிப்பு 3.6.20-RH1க்கு மேம்படுத்தப்பட்டது. இனிவரும் SAS/SATA கட்டுப்படுத்திகளுக்கும் பின்வரும் மாற்றங்களை இந்த மேம்படுத்தல் செயல்படுத்துகிறது (மற்றவைகளில்):

    • I/O கட்டுப்பாடு sg_io சேர்க்கப்பட்டது. இந்த ioctl பல பாதைகளின் சேவையை விரிவாக்க கொடுக்கப்பட்டது.

    • /proc/driver/cciss உள்ளீடுகள் பெரிய அளவில் இயக்கிகள் நிறுவப்படும் போது கணினி அழித்தை தடுக்க மாற்றப்பட்டுள்ளது.

    • READ_AHEAD cciss இயக்கியில் இப்போது நீக்கப்பட்டது. cciss இயக்கி இப்போது முன்னிருப்பாக 256ஆக இருக்கும். சோதனை READ_AHEAD=1024 ஒரு தொடர்ச்சியாக தீர்வு தராதததை காட்டுகிறது, சில சமயங்களில் இந்த அமைவு கணினியை செயலிழக்கும்.

  • megaraid_sas: இயக்கி பதிப்பு 3.18 க்கு LSI 1078 சிப்செட்களில் MegaRAID முறைமையில் இயங்க துணைபுரிகிறது. கூடுதலாக, பல்வேறு பிழைத்திருத்தங்கள் இந்த மேம்படுத்தலில் செயல்படுத்தப்பட்டுள்ளது:

    • MFI_POLL_TIMEOUT_SECS இப்போது 60 விநாடிகள் (10 விநாடிகளிலிருந்து அதிகரிக்கப்பட்டது). இது ஃபெர்ம்வேரை வைக்க செயப்பட்டது, இது அதிகபட்சமாக 60 விநாடிகள் INIT கட்டளைக்கு பதிலளிக்க அனுமதிக்கிறது.

    • தொடர்ச்சியான சிப் மறுஅமைவுகள் மற்றும் கட்டளை நேரம் முடிதல் ஒரு ஃப்ரேம் கணித்தல் இப்போது சரி செய்யப்பட்டது. இந்த மேம்படுத்தலில், இயக்கி இப்போது சரியான ஃப்ரேம் எண்ணிக்கை கோரிக்கையின் பெயரில் அனுப்புகிறது.

    • சேர்க்கப்பட்ட தொகுதி அளவுரு poll_mode_io போலிங்க்கு துணைபுரிகிறது.

  • arcmsr: இயக்கி 1.20.00.15.rh பதிப்பிற்கு மேம்படுத்தியது. இந்த மேம்படுத்தல் பல்வேறு பிழைத்திருத்தங்கள் மற்றும் சிறிய விரிவாக்கங்களை செயல்படுத்துகிறது; கூடுதலாக, பின்வரும் SATA RAID அடாப்டர்களுக்கு சேவை அளிக்கிறது:

    • ARC1200

    • ARC1201

    • ARC1202

தொழில்நுட்ப முன்பார்வைகள்

தொழில்நுட்ப முன்பார்வை வசதிகளை தற்போது Red Hat Enterprise Linux 4.7 இன் கீழ் சந்தா சேவைகளில் துணை புரிவதில்லை, அவை முழுமையாக வேலை செய்வதில்லை மற்றும் அது தயாரிப்புக்குப் பயன்படுவதில்லை. எனினும், இந்த வசதி வாடிக்கையாளரை திருப்திப்படுத்தவும், விரிவான ஒரு எதிர்பார்த்தலுக்கும் சேர்க்கப்படுகிறது.

வாடிக்கையாளர்கள் இந்த வசதியை தயாரிப்பு இல்லாத சூழலில் பயனுள்ளதாக காணலாம். வாடிக்கையாளர்களும் இந்த வசதிக்கு முழுமையாக சேவையளிக்கும் முன் தொழில்நுட்ப முன்பார்வை பற்றிய கருத்துக்களை கூறலாம். அதிக அளவு பாதுகாப்பு சிக்கலில் பிழைத்திருத்தங்கள் கொடுக்கப்படும்.

தொழில்நுட்ப முன்பார்வை வசதி உருவாக்கத்தின் போது, கூடுதல் கூறுகள் பொதுவாக சோதனை செய்ய வரும். இதுவே இனிவரும் வெளியீட்டில் Red Hat முழுவதும் துணைபுரிய அறிகுறியாகும்.

Systemtap

Systemtap இலவச மென்பொருள் (GPL) வடிவமைப்பை இயங்கும் லினக்ஸ் கணினி பற்றி தகவலை சேகரிப்பது மூலம் கொடுக்கிறது. இது அதன் திறன் அல்லது செயல்பாடு சிக்கலை ஆராயும். systemtap உதவியால், நிரலாளர்கள் சலிப்படைதல், மறு ஒருங்கிணைத்தல், நிறுவல் மற்றும் மறு துவக்க வரிசை போன்றவற்றுக்கு செல்ல வேண்டாம்.

gcc

GNU Compiler Collection (gcc-4.1) இந்த வெளியீட்டில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த கம்பைலர் Red Hat Enterprise Linux 4.4 இல் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டிருந்தது.

gcc-4.1 பற்றிய மேலும் விவரங்களுக்கு, http://gcc.gnu.org/ இல் திட்ட இணைய தளத்தை பார்க்கவும். gcc-4.1.2க்கு விரிவான கையேட்டிற்கு http://gcc.gnu.org/onlinedocs/gcc-4.1.2/gcc/ இல் வாசிக்கவும்.

autofs5

autofs5 இந்த வெளியீட்டில் தொழில்நுட்ப முன்பார்வையாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்த autofs இன் புதிய பதிப்பு பல தீர்க்க முடியாத சிக்கல்களை தீர்க்கிறது. autofs5 வசதி பின்வரும் மேம்படுத்தல்களை கொண்டுள்ளது:

  • நேரடி ஒப்பீடு சேவை, கோப்பு முறைமை வரிசைப்படுத்தலில் தானாக கோப்பு முறைமைகளை ஏற்ற நுட்பத்தை கொடுக்கிறது.

  • lazy mount மற்றும் umount சேவை

  • புதிய கட்டமைப்பு கோப்பு மூலம் மேம்படுத்தப்பட்ட LDAP துணை, /etc/autofs_ldap_auth.conf

  • nsswitch.conf பயனின் முழுமையான செயல்படுத்தல்

  • நேரடி ஒப்பீடுகளுக்கு பல முதன்மை ஒப்பீடு உள்ளீடுகள்

  • ஒப்பீட்டுக்கு முழுமையான செயல்படுத்தலை சேர்க்க, autofs இல் முதன்மை ஒப்பீடுகளில் குறிப்பிட்ட ஒப்பீடுகளின் உள்ளடக்கங்களை அனுமதிக்கிறது

தற்போது, autofs5 முதன்மை ஒப்பீடு சொல் ஆய்வி ஏற்றப்புள்ளி அல்லது ஒப்பீடு குறிப்பீட்டில் சரியாக மேற்கோள் சரங்களை இட முடியவில்லை. எனினும் மேற்கோள் சரங்கள் ஒப்பீட்டில் தானாக எழுதப்பட வேண்டும்.

autofs நிறுவப்பட்டு முன்னிருப்பாக இந்த மேம்படுத்தலில் இயங்குகிறது. எனினும், நீங்கள் autofs5 தொகுப்பை கைமுறையாக நிறுவி autofs5 விரிவாக்கங்களை பயன்படுத்தலாம்.

நீங்கள் autofs மற்றும் autofs5ஐயும் நிறுவலாம். எனினும், ஒன்று மட்டுமே automount சேவையகளில் பயன்படுத்த முடியும். உங்கள் automounter ஆக autofs5ஐ நிறுவி பயன்படுத்த, இந்த வழிமுறைகளை செய்யவும்:

  1. ரூட்டாக புகுபதிவு செய்து autofs சேவையில் service autofs stop கட்டளையை பயன்படுத்தி நிறுத்தவும்.

  2. autofs சேவையை chkconfig autofs off கட்டளை மூலம் செயல்நீக்கம் செய்யவும்.

  3. autofs5 தொகுப்பை நிறுவவும்.

  4. autofs5 சேவையை chkconfig autofs5 on கட்டளை மூலம் செயல்படுத்தவும்.

  5. autofs5service autofs5 start கட்டளை மூலம் துவக்கவும்.

autofs5 பற்றிய மேலும் தகவலுக்கு, பின்வரும் man பக்கங்களை பார்க்கவும் (autofs5 தொகுப்பினை நிறுவிய பின்னர்):

  • autofs5(5)

  • autofs5(8)

  • auto.master.v5(5)

  • automount5(8)

நீங்கள் மேலும் விவரங்களுக்கு, /usr/share/doc/autofs5-<version>/README.v5.release ஐ அணுகலாம்.

தீர்க்கப்பட்ட சிக்கல்கள்

  • ஒரு பயன்பாடு systool ஒருmbox கோப்பினை (Emulex lpfc இயக்கியால் உருவாக்கப்பட்டது) /sys/class/scsi_host/host<scsi host number>/ கோப்பினை வாசித்தல், "தவறான நிலை" பிழை செய்தி பணியகத்தில் அச்சிடப்பட்டு கணினி பதிவு கோப்பிலிருந்து வெளியேறும்.

  • கர்னல் இப்போது Data Terminal Ready (DTR) சிக்னல்களை தொடர் துறைகளில் துவக்கும் நேரத்தில் அச்சிடுகிறது. DTR சில சாதனங்களுக்கு தேவைப்படுகிறது; இதன் தீர்வாக, கர்ன்ல துவக்க செய்திகள் தொடர் பணியகங்களில் சில சாதனங்களில் அச்சிடப்படுவதில்லை.

  • Red Hat Enterprise Linux 4.6இல், ஒரு சீரியல் பணியகத்தின் மூலம் இயக்கத்தளத்தை நிறுவும் போது புகுபதிவு ப்ராம்பட் தோன்றாது. இந்த சிக்கல் இந்த வெளியீட்டில் சரி செய்யப்பட்டது.

தெரிந்த சிக்கல்கள்

  • openmpi மற்றும் lam இன் முந்தைய பதிப்பிலுள்ள ஒரு பிழை இந்த தொகுப்புகளை மேம்படுத்துவதிலிருந்து தடுக்கலாம். இந்த பிழையே அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்தும் போது up2date ஐ செயலிழக்க செய்கிறது.

    இந்த பிழை openmpi அல்லது lamஐ மேம்படுத்த முயற்சிக்கும் போது ஏற்பட்டதாகும்:

    பிழை: %preun(openmpi-[version]) scriptlet தோல்விற்றது, நிலை 2 வெளியேற்றப்பட்டது
    

    இந்த பிழை பின்வரும் பிழையை (புகுபதிவு செய்யப்பட்டது /var/log/up2date) up2dateஆல் அனைத்து தொகுப்புகளையும் மேம்படுத்த முயற்சிக்கும் போது ஏற்பட்டது:

    up2date ஆனது rpm பரிமாற்றத்தை செயலிழக்கிறது - %pre %pro தோல்வி ?.
    

    எனினும் நீங்கள் இந்த பிழைகளை தவிர்க்க கைமுறையாக பழைய openmpi மற்றும் lam பதிப்புகளை முதலில் நீக்க வேண்டும். இதனை செய்ய பின்வரும் rpm கட்டளை பயன்படுத்தவும்:

    rpm -qa | grep '^openmpi-\|^lam-' | xargs rpm -e --noscripts --allmatches

  • ஒரு LUN ஒரு கட்டமைக்கப்பட்ட சேமிப்பக அமைப்பில் அழிக்கப்பட்டால், மாற்றம் புரவலனில் பிரதிபலிக்கப்படுவதில்லை. அந்த நேரத்தில், lvm கட்டளைகள் dm-multipathஐ பயன்படுத்தும் போது கட்டாயமில்லாமல் செயலிழக்கப்படும், LUN இப்போது stale நிலையில் இருக்கும்.

    இதில் பணிபுரிய, அனைத்து சாதனங்கள் மற்றும் mpath இணைப்பு உள்ளீடுகளையும் /etc/lvm/.cache இல் குறிப்பிட்ட stale LUN இல் அழிக்கவும். இந்த உள்ளீடுகளை அறிய பின்வரும் கட்டளையை இயக்கவும்:

    ls -l /dev/mpath | grep <stale LUN>

    எடுத்துக்காட்டாக, <stale LUN> என்பது 3600d0230003414f30000203a7bc41a00 என்றால், பின்வரும் தீர்வு வரும்:

    lrwxrwxrwx 1 root root 7 Aug  2 10:33 /3600d0230003414f30000203a7bc41a00 -> ../dm-4
    lrwxrwx--rwx 1 root root 7 Aug  2 10:33 /3600d0230003414f30000203a7bc41a00p1 -> ../dm-5
            

    அதாவது 3600d0230003414f30000203a7bc41a00 இரண்டு mpath இணைப்புகளை ஒப்பிடுகிறது: dm-4 மற்றும் dm-5.

    எனினும், பின்வரும் வரிகள் /etc/lvm/.cacheஇலிருந்து அழிக்கப்பட வேண்டும்:

    /dev/dm-4 
    /dev/dm-5 
    /dev/mapper/3600d0230003414f30000203a7bc41a00
    /dev/mapper/3600d0230003414f30000203a7bc41a00p1
    /dev/mpath/3600d0230003414f30000203a7bc41a00
    /dev/mpath/3600d0230003414f30000203a7bc41a00p1
    
  • ஒரு HA-RAID இரு கணினி கட்டமைப்பில், இரு SAS அடாப்டர்கள் இரு கணினிகளில் சொருகப்பட்டு ஒரு பகிரப்பட்ட SAS வட்டில் இணைக்கப்படும். Preferred Dual Adapter State பண்புகள் அமைவை Primaryஇல் இரு SAS அடாப்டர்களில் ஒரு ரேஸ் நிலையில் இயக்கப்படும் மற்றும் முடிவில்லா தோல்வி இரு SAS அடாப்ட்களுக்கிடையே இருக்கும். இது ஏனெனில் ஒரே ஒரு SAS அடாப்டர் Primaryக்கு அமைக்கப்படும்.

    இந்த பிழையை தவிர்க்க, Preferred Dual Adapter State ஒரு SAS அடாப்ட்ருக்கு None என அமைக்கபடும், வேறு SAS அடாப்டர் Primaryக்கு அமைக்கடும்.

  • இந்த வெளியீட்டின் X சேவையகம் Intel GM965அடிப்படையான சிப்செட்டில் கணினியில் தோல்வியடையலாம்.

  • நீங்கள் hp_sw கர்னல் தொகுதியை பயன்படுத்தினால், மேம்படுத்தப்பட்ட device-mapper-multipath தொகுப்பை நிறுவவும்.

    நீங்கள் HP அரேயை சரியாக கட்டமைக்க ஆக்டிவ்/பாசிவ் முறைமையை பயன்படுத்தி ஒரு லினக்ஸ் கணினியிலிருந்து இணைப்புகளை அங்கீகரிக்க வேண்டும். இதனை செய்ய, பின்வரும் படிநிலைகளை செய்யவும்:

    1. ஒவ்வொரு இணைப்பிற்கும் world wide port name (WWPN) என்ன என்பது show connectionsஐ பயன்படுத்தி வரையறுக்கப்படுகிறது. கீழேயுள்ளது show connections இன் ஒரு HP MSA1000 இல் இரண்டு இணைப்புகளுடன் உள்ள மாதிரி வெளிப்பாடு ஆகும்:

      Connection Name: <Unknown>
         Host WWNN = 200100E0-8B3C0A65
         Host WWPN = 210100E0-8B3C0A65
         Profile Name = Default
         Unit Offset = 0
         Controller 2 Port 1 Status = Online
      
      Connection Name: <Unknown>
         Host WWNN = 200000E0-8B1C0A65
         Host WWPN = 210000E0-8B1C0A65
         Profile Name = Default
         Unit Offset = 0
         Controller 1 Port 1 Status = Online
      
    2. ஒவ்வொரு இணைப்புளையும் பின்வரும் கட்டளையை பயன்படுத்தி கட்டமைக்கவும்:

      add connection [connection name] WWPN=[WWPN ID] profile=Linux OFFSET=[unit offset]

      [connection name] ஐ தனித்து அமைக்கலாம்.

      கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டைப் பயன்படுத்தி, சரியான கட்டளை:

      add connection foo-p2 WWPN=210000E0-8B1C0A65 profile=Linux OFFSET=0

      add connection foo-p1 WWPN=210100E0-8B3C0A65 profile=Linux OFFSET=0

    3. show connections ஐ இயக்குவது மீண்டும் ஒவ்வொரு இணைப்பும் சரியாக கட்டமைக்கப்பட்டுள்ளதா என்பதை சரி பார்க்கிறது. கொடுக்கப்பட்ட எடுத்துக்காட்டின் படி, சரியான கட்டமைப்பு:

      Connection Name: foo-p2
         Host WWNN = 200000E0-8B1C0A65
         Host WWPN = 210000E0-8B1C0A65
         Profile Name = Linux
         Unit Offset = 0
         Controller 1 Port 1 Status = Online
      
      Connection Name: foo-p1
         Host WWNN = 200100E0-8B3C0A65
         Host WWPN = 210100E0-8B3C0A65
         Profile Name = Linux
         Unit Offset = 0
         Controller 2 Port 1 Status = Online
      
  • Red Hat quota கட்டளையை EXT3 கோப்பு முறைமையில் பயன்படுத்த ஊக்கப்படுத்தவில்லை. ஏனெனில் சிலவற்றில், இதனை செய்தால் ஒரு டெட்லாக்கை உண்டாக்கும்.

    தொடர்புடைய kjournaldஐ சோதித்தல் சில சமயம் EXT3-குறிப்பிட்ட கால்அவுட்களை quota இயங்கும் போது பயன்படுத்தலாம். எனினும், Red Hat இந்த சிக்கலை Red Hat Enterprise Linux 4இல் சரி செய்ய திட்டம் எதுவும் இல்லை.

    இந்த சிக்கல் Red Hat Enterprise Linux 5 இல் இல்லை.

  • Mellanox MT25204க்கு தொடர்பாட வன்பொருள் சோதனை உள்ளார்ந்த பிழை ஏற்படுத்தி சில அதிக பளு நிலைகளில் செய்கிறது. ib_mthca இயக்கி ஒரு catastrophic பிழையை இந்த வன்பொருளில் கொண்டுள்ளது, இது பொதுவாக ஒரு போதாமை முடித்தல் வரிசை ஆழம் தொடர்பான பயனர் பயன்பாட்டால் உருவாக்கப்பட்ட கோரிக்கையாகும்

    இயக்கி வன்பொருளை மறுஅமைவு செய்து அதன் ஒரு நிகழ்வை மீட்க அனைத்து இருக்கும் இணைப்புகளை பிழையின் நேரத்தில் இழக்க பயன்படுகிறது. இது பொதுவாக பிரிவு தவற்றை பயனர் பயன்பாட்டில் கொடுக்கிறது. மேலும் opensm பிழையின் நேரத்தில் இயங்கும் போது, அதனை மீண்டும் தொடர கைமுறையாக செய்ய வேண்டும்.

  • பணிமேடை பகிர்வு இணைப்பு சின்னம் அதன் சூழல் மெனுவை இரட்டை சொடுக்கும் போது காட்டுகிறது, வலது சொடுக்கும் போது காட்டுவதில்லை. அனைத்து பிற சின்னங்கள் இதன் சூழல் மெனுக்களை வலது சொடுக்கும் போது காட்டுகிறது

( amd64 )

Provided by: Liquid Web, LLC